"அதிமுகவினர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்க்க வேண்டும்" - ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டறிக்கை

அதிமுக தலைமையின் ஒப்புதலின்றி நிர்வாகிகள், தனிப்பட்ட கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Update: 2020-08-15 12:33 GMT
முதலமைச்சர் வேட்பாளர் குறித்து, அதிமுக நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்கள், சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக , மூத்த அமைச்சர்கள், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை இரண்டு முறை தனித்தனியே சந்தித்து, ஆலோசனை நடத்தினர். இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய அடுத்தடுத்த ஆலோசனை கூட்டங்கள் பிற்பகலில் நிறைவடைந்தது. சுமார் 4 மணி நேர பரபரப்பிற்கு  பிறகு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியீட்ட்டுள்ளனர். அதில் கட்சி தலைமை ஒப்புதல் இல்லாமல் நிர்வாகிகள்,  தனிப்பட்ட  கருத்துகளை தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க  வேண்டும் என வலியுறுத்தினர். 


கருத்துப் பரிமாற்றம் செய்வதன் மூலம் எதையும் சாதிக்கப்போவதில்லை என்றும், அரசின் திட்டங்களை கூறி, மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற, அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது என்று கூறியுள்ளனர். சிறு சலசலப்புகளுக்கும் இடம் தராமல் நம்மை வீழ்த்த நினைப்பவர்களின் பேராசைக்கு இடம் தராமல் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். கடந்த காலத்தில் இருந்த கட்டுப்பாட்டோடு நிர்வாகிககள் இருக்க வேண்டும் என்றும்,  கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்


Tags:    

மேலும் செய்திகள்