ஊரடங்கு விதிமீறல் - ரூ.18.94 கோடி அபராதம்

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 9 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2020-07-27 09:02 GMT
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 9 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 8 லட்சத்து 26 ஆயிரத்து 301 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 லட்சத்து 54 ஆயிரத்து 177 வாகனங்களை பறிமுதல் செய்துள்ள போலீசார் 9 லட்சத்து 8 ஆயிரத்து 446 பேரை கைது செய்துள்ளனர். ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக 18 கோடியே 94 லட்சத்து 3 ஆயிரத்து 811 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்