செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 228 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 723ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 723ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக 228 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 524 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 761 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுக்கோட்டையில் இன்று மேலும் 79 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது. 561 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
684 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுரை
17 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 184 பேர் பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 184 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. தொற்று உறுதியானவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட் டனர். மாவட்டத்தில் கொரானா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 125 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 585 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரத்து 516 பேர் குணமடைந்துள்ளனர்.