பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி

பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-23 05:34 GMT
பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிந்த ராஜூ மற்றும் அவரது உதவியாளர் கணேசன் ஆகியோருக்கு கடந்த 20ம் தேதி பேராவூரணி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவரும் ஆம்பூலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எம்எல்ஏ குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்