ஊரடங்கு எதிரொலி - 5 லட்சத்தை நெருங்கிய இ-பாஸ் கோரிக்கை

சென்னையில் இ-பாஸ் கோரி விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியது.

Update: 2020-07-22 06:33 GMT
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வெளி மாவட்டங்களுக்கு செல்வோருக்கு இ-பாஸ் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது. 

இதுவரை இ-பாஸ் கோரி 4 லட்சத்து 92 ஆயிரத்து 149 பேர்  விண்ணப்பித்துள்ளனர். இறப்பு, திருமணம், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக1 லட்சத்து 61 ஆயிரத்து 754  பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 3 லட்சத்து 29 ஆயிரத்து 829 விண்ணப்பங்களை நிராகரித்த சென்னை மாநகராட்சி 566 விண்ணப்பங்களை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளது.

திருமணத்துக்கு செல்ல விண்ணப்பித்த 39 ஆயிரத்து 313 பேரில்,11 ஆயிரத்து 715 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

இறப்புக்கு செல்ல அனுமதி கோரிய 28 ஆயிரத்து 620 பேரில், 20 ஆயிரத்து 411 பேருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்