நாட்டின் இரண்டாவது பிளாஸ்மா வங்கி - சென்னையில் நாளை செயல்பாட்டுக்கு வருகிறது

டெல்லிக்கு அடுத்த படியாக நாட்டில் இரண்டாவது பெரிய பிளாஸ்மா வங்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நாளை செயல்பாட்டுக்கு வர உள்ளது.

Update: 2020-07-21 10:43 GMT
கொரோனா தொற்றை குணப்படுத்த, தடுக்க மருந்துகள் இல்லாத சூழலில், கொரோனா தொற்று  பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் ரத்தத்தை பெற்று அதிலிருந்து, பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தி, சோதனை அடிப்படையில் நோயை குணப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்மா தொடர்பான ஆய்வு பணிகள் மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றிடம் தமிழக அரசு அனுமதி பெற்று உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 26 நபர்களுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளித்ததில்,  இதுவரை 24 பேர் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி, 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை நாளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைக்க உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்