மனிதர்கள் மீதான சோதனை சென்னையில் தொடங்கியது - கோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை தீவிரம்

கோவாக்சின் தடுப்பு மருந்தை, மனிதர்கள் மீது செலுத்தி நடத்தப்படும் சோதனை சென்னையில் தொடங்கியுள்ளது.

Update: 2020-07-21 10:17 GMT
புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஐசிஎம்ஆர் அனுமதியளித்தது. இதனை தொடர்ந்து சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அதன் ஆராய்ச்சி மையத்தில் பரிசோதனை துவக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று செலுத்தப்பட்ட தன்னார்வலர்களுக்கு மீண்டும் 14 நாட்களுக்கு பிறகு 2வது டோஸ் மருந்து செலுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்