திருமழிசை சந்தையில் பிரித்து அனுப்பப்படும் வாகனங்கள் - வியாபாரிகள் திடீர் போராட்டம்

திருமழிசை சந்தையில் வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக வியாபாரிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-07-20 05:13 GMT
திருமழிசை சந்தையில் வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக வியாபாரிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகன நெரிசல் தவிர்க்கவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், காய்கறிகளை வாங்க வரும் வாகனங்களை, ஐம்பது, ஐம்பது வாகனங்களாக உள்ளே அனுப்பி வருகின்றனர். இதனால் முதல் நாள் மாலை 6 மணிக்கு வரும் வாகனங்கள் மறுநாள் அதிகாலை 3 மணிக்கே, காய்கறிகளை வாங்கி கொண்டு வெளியே செல்லும் நிலை ஏற்படுவதாகவும், இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்