சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் பரிசோதனை அதிகம்

மதுரையில் இதுவரை 92 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், எட்டாயிரத்து 44 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-19 10:43 GMT
மதுரையில் இதுவரை 92 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், எட்டாயிரத்து 44 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நான்காயிரத்து 658 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 147 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.மேலும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த 150-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நடமாடும் பரிசோதனை மூலமாகவும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அரசு மருத்துவமனையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 24 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு , அவர்கள் தங்களது குழந்தைகளுடன் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்