சரக்கு வாகனங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் விவகாரம்: நீதிமன்றத்தில் அரசு பதில்

தமிழகத்தில், சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு, கடந்த மே மாதம் 14ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

Update: 2020-07-07 12:24 GMT
இந்த அரசாணைக்கு தடை விதிக்கவும், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வரிவிலக்கு அளிக்க உத்தரவிட கோரியும்  , தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் முருகன் வெங்கடாச்சலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தமிழக உள்துறை தரப்பில் பதில்  மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில் ஊரடங்கு காரணமாக கனரக வாகனங்கள் இயக்கப்படவில்லை என்பது தவறு என்றும்,  சரக்கு வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் தகுதி சான்று, பதிவு சான்று, பெர்மிட் ஆகிய மோட்டார் வாகன சட்ட ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசத்தை நீட்டிப்பது உள்துறை சம்பந்தப்பட்டது அல்ல என்றும், வாகன வரி செலுத்த விலக்கு அளித்தால் அரசுக்கு ஆயிரத்து 724 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் பதில் மனுவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்