புதிய மாவட்டம் மற்றும் புதிய தாலுகா கோரி போராட்டம் - ஏராளமானோர் பங்கேற்பு

நாச்சியார் கோவில் பகுதியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சல் அட்டை அனுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-06-26 08:55 GMT
நாச்சியார் கோவில் பகுதியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சல் அட்டை அனுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், நான்கு கட்ட போராட்டமாக நாச்சியார் கோவிலில் ஒரு லட்சம் கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த போராட்டத்தோடு நாச்சியார் கோவிலை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும் என்று கூறி கையில் குத்து விளக்குடன் அப்பகுதி மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்