பச்சிளம் குழந்தையை தாக்கிய தந்தை கைது - படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதி

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே பச்சிளம் குழந்தையை கடுமையாக தாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-06-24 02:58 GMT
எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள அங்கமாலியை சேர்ந்த ஷைஜு தாமஸ் என்பவர் நேபாளத்தை  பூர்விகமாக கொண்ட ஒரு பெண்ணை திருமண செய்துள்ளார். அவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ஷைஜு தாமஸ், ஆத்திரத்தில் பச்சிளம்  குழந்தையை தரையில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த அந்த குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தவறி கீழே விழுந்து விட்டதாக ஷைஜு தாமஸ் தெரிவித்துள்ளார்.  சந்தேகமடைந்த  மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். விசாரணையில் பச்சிளம் குழந்தையை தாமஸ் கடுமையாக தாக்கியது தெரிய வந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது  செய்து சிறையில் அடைத்தனர்.  எலும்பு முறிவு ஏற்பட்ட பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது  நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்