வாயில் காயம் ஏற்பட்ட ஆண் யானை உயிரிழப்பு - சிகிச்சைகள் பலனளிக்காததால் யானை உயிரிழந்த சோகம்

கோவையில் வாயில் காயம் பட்டதால் அவதிப்பட்டு வந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சக யானையுடன் ஏற்பட்ட மோதலால் உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-06-23 03:10 GMT
கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஜம்புகண்டியில் உள்ள தோட்டத்தில் 12 வயதான ஆண் யானை ஒன்று வாயில் காயம் பட்ட நிலையில் உணவு உண்ண முடியாமல் தவித்து வந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானைக்கு உடனடியாக சிகிச்சைகளை வழங்கினர். பழங்களின் உள்ளே மாத்திரைகள் மருந்துகள் வைத்து வழங்கப்பட்ட போதிலும் யானையின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. 

வாயில் காயம் ஏற்பட்டதால் உணவை சாப்பிட முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தது அந்த ஆண் யானை. இதனிடையே தொடர்ந்து அளித்து வந்த சிகிச்சை பலன் கொடுக்காமல் யானை உயிரிழந்தது. யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவெடுத்தனர். மருத்துவக் குழு முன்னிலையில் யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது யானையின் வாயில் இடது பக்கம் மேல்பகுதில் 9 செ.மீ விட்டம் மற்றும் 15 செ.மீ ஆழத்தில் காயம் உள்ளதாக தெரியவந்தது. சக ஆண் யானையுடன் ஏற்பட்ட மோதலில் யானைக்கு காயம் ஏற்பட்டதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வெடி வைத்ததில் யானையின் வாய் சேதமடைந்ததாக கூறப்பட்ட நிலையில் அதை வனத்துறை மறுத்தது
Tags:    

மேலும் செய்திகள்