கலால் வரிச்சுமையை மக்கள்மீது திணிக்கும் நிறுவனங்கள் - பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 9 வது நாளாக உயர்ந்துள்ளது.

Update: 2020-06-15 09:56 GMT
ஊரடங்கு காரணமாக, 34 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில், கடந்த 7 ஆம் தேதியில் இருந்து விலை உயரத் தொடங்கியது.10 நாட்களுக்கு முன் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய் 54 காசுகளாகவும், டீசல் லிட்டர் 68 ரூபாய் 22  காசுகளாகவும் இருந்த நிலையில் விலை உயர்வு தொடங்கியது.

தொடர்ந்து கடந்த 9 நாட்களாக விலை ஏற்றம் கண்டு,  ஒரு லிட்டர் பெட்ரோல் 79 ரூபாய் 96 காசுகளாகவும், டீசல், லிட்டருக்கு 72 ரூபாய் 69  காசுகளாகவும் உயர்ந்துள்ளது.கடந்த 9 நாட்களில், பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாய் 42 காசுகளும், டீசலுக்கு 4 ரூபாய் 47 காசுகளும் உயர்ந்துள்ளது.எண்ணெய் நிறுவனங்களுக்கு கலால் வரியை மத்திய அரசு உயர்த்திய நிலையில், அந்த சுமையை தற்போது எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் திணிந்து வருகின்றன. 

இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை  2004 ஆம் ஆண்டில் இருந்தது போல, ஒரு பேரல் 40 டாலர் அளவில் விற்பனையாகிறது.இதைச் சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, பெட்ரோல், டீசல் விலையையும், 2004 நிலவிய விலைக்கு குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாக அத்தியாவசிய பொருட்களில் விலை உயரத்தொடங்கும் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்