"விவசாயிகளை துன்புறுத்தக் கூடாது" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

விவசாயம் செய்பவர்களை ஊக்குவிக்க வேண்டுமே தவிர, துன்புறுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Update: 2020-06-13 02:54 GMT
விவசாயம் செய்பவர்களை ஊக்குவிக்க வேண்டுமே தவிர, துன்புறுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த ரெத்தினம் செட்டி என்ற விவசாயி, தமது நிலத்தில் அறுவடை செய்த நெல்லை, தஞ்சாவூரில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றுள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜி.ஆர்.சுவாமிநாதன், விவசாயி மீது வழக்கு பதிவுசெய்தது, வருத்தத்திற்குரிய விஷயம் என கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்