"உயிரிழந்த ராணுவ வீரர் மதியழகன் மனைவிக்கு அரசு வேலை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
சேலம் மாவட்டம் எடப்பாடியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மகளிருக்கு, நிதி உதவி வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மகளிருக்கு, நிதி உதவி வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்காக, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா சிறப்பு கடன் உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 9 பெண்களுக்கு சிறப்பு கடன் உதவிக்கான சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கினார். இதேபோல், எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மதியழகனின் மனைவிக்கு அரசு வேலை வழங்கபடும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.