சுகாதாரத் துறையினரை அச்சுறுத்தும் கொரோனா

சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

Update: 2020-06-13 02:29 GMT
சென்னையில் கடந்த மே மாத இறுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சுகாதாரத்துறையினர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க தொடங்கியது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு 7 நாட்கள் கொரோனா வார்டுகளில் பணி வழங்கப்பட்டு, 7 நாள் இறுதியில் பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். அதன்படி கடந்த சில தினங்களில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த 7 மூத்த மருத்துவர்கள், 25க்கும் மேற்பட்ட பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் உட்பட126 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்டான்லி மருத்துவமனையில் 10 மருத்துவர்களுக்கும், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 4 மருத்துவர்களுக்கும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தலா 2 மருத்துவர்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மூத்த மருத்துவர்கள் உட்பட சுகாதாரத்துறையினர் 140க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்