அபுதாபியில் சிக்கித் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள் - தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

அபுதாபியில் சிக்கித் தவிக்கும் 579 தமிழக தொழிலாளர்கள் தங்களை தாயகம் அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-06-09 10:30 GMT
அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தில் 3980 இந்தியர்கள் வேலை பார்த்து வந்தனர். ஊரடங்கு காரணமாக எண்ணெய் நிறுவனம் தங்களிடம் உள்ள தொழிலாளர்களை தனி விமானம் வைத்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியது. ஆனால் தமிழகத்தை சேர்ந்த 579 தொழிலாளர்கள் இன்னும் அங்குள்ள முகாமிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கான அடிப்படை தேவைகள் இல்லாமல் அவதிப்படுவதாக கூறும் அவர்கள், தமிழக அரசு தங்களை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தாங்கள் வரும் தனி விமானத்தை தரையிறங்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர்கள், இந்திய தூதரகத்தை அணுகி தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக தொழிலாளர்கள் அபுதாபியில் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்