நாளை டாஸ்மாக் கடை திறப்பு - கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு
தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் நாளை திறக்கப்படும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் நாளை திறக்கப்படும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மதுபான கடைக்கும் தலா 2 காவலர்கள், 2
ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 40 -லிருந்து 50 வயது வரை உள்ளவர்கள் பிற்பகல் ஒன்று முதல் மூன்று மணி வரையிலும், 40 வயதிற்குள் உள்ளவர்கள், மாலை 3 முதல் 5 மணி வரையிலும் மதுவை பெற்று செல்லலாம் என்றும் அரசு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது