"மருத்துவர்களுக்கு சர்வதேச தர உபகரணங்கள் வழங்குக" - முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு சர்வதேச தரத்திலான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு சர்வதேச தரத்திலான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா மருத்துவ பணியில் ஈடுபட்டு, மரணமடைபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு மருத்துவமனைகளில், பணிபுரியும், தற்காலிக செவிலியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.