சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவருக்கு கொரோனா - புளியங்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள்
சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவருக்கு கொரோனா - புளியங்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள்
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா உறுதி செய்யப்படுவதற்கு முன்பு
அந்த முதியவர் தனியார் மருத்துவமனையில் சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மூன்று செவிலியர்களுக்கு கொரோனா இருக்கிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது. உறவினர்களுடன் அந்த முதியவர் இயல்பாக கலந்துரையாடி வந்துள்ளார் என்பதால் புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட 33வார்டு பகுதியில் கொரோனா அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.