சீருடைப் பணியாளர் பணி தேர்வு தொடர்பான வழக்கு - முறைகேடு நடைபெறவில்லை என தமிழக அரசு பதில்

சீருடைப் பணியாளர் பணி தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-03-05 13:58 GMT
காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2019 ம் ஆண்டு தேர்வு நடத்தி, பிப்ரவரி 2ம் தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியலை வெளியிடப்பட்டது.

இதில் முறைகேடு நடைபெற்றதாகவும்,  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட பிரதான வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு  விசாரணைக்கு வந்தது.

வழக்கு தொடர்ந்தவர்களின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு மாறானது எனவும், தேர்வு நடைமுறைகள் குறித்த தவறான விவரங்களை நீதிமன்றத்திற்கு தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இது தொடர்பான முழு விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்வதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக மார்ச் 26-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்