கள்ளக்குறிச்சி, அரியலூரில் புதிய மருத்துவக் கல்லூரி - முதலமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்டுகிறார்
அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க நிதி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க நிதி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவாங்கூர் கிராமத்தில், 20 புள்ளி 5 ஏக்கர் பரப்பில், புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க 382 கோடி ரூபாயும், அரியலூரில்10 புள்ளி 83 ஏக்கர் நிலப் பரப்பில் புதிய மருத்துவக் கல்லூரி கட்ட 347 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகளுக்கு, முதலமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.