மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் குறித்த வழக்கு - தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு
தமிழகத்தில் 13 ஆயிரத்து 500 மக்கள் நல பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
தமிழகத்தில் 13 ஆயிரத்து 500 மக்கள் நல பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. விழுப்புரத்தை சேர்ந்த தன்ராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஹோலி விடுமுறை முடிந்து மார்ச் மாதம் மூன்றாவது வாரம் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் உறுதி அளித்தனர்.