ஜெயலலிதா நினைவு மண்டபம் - 90 % பணிகள் நிறைவு, திறப்பு விழா எப்போது?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு மண்டபத்தில் கட்டுமான பணிகள் நிறைவடையாததால் திறப்பு விழா ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2020-02-23 08:10 GMT
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டப கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர்.  சென்னை ஐஐடி வழங்கிய பீனிக்ஸ் பறவை வடிவத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.  இது சவாலான பணி என்பதால் துபாயில் இருந்து கட்டிடக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த ஆலோசனைப்படி பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தற்போதைய நிலையில் 90 சதவீதம் பணிகள் மட்டுமே நிறைவடைந்து உள்ளதால்,  ஜெயலலிதா பிறந்த நாளான  நாளை, நினைவு மண்டபம் சின்னம் பொது மக்கள் பார்வைக்கு திறக்க வாய்ப்பில்லை. பணிகள் நிறைவடைந்ததும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு திறப்பு விழா தேதி முறைப்படி வெளியாகும் என தெரிகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்