ரூ.162 கோடியில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடங்கள் - நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடங்கள் கட்ட 162 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடங்கள் கட்ட 162 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கோவை மற்றும் திருச்சியில் தகவல் தொழில்நுட்ப கட்டடங்கள் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதையடுத்து 114 கோடி ரூபாய் செலவில் கோவை மாவட்டம் விளாங்குறிச்சியிலும் 48 கோடி மதிப்பீட்டில் திருச்சியில் தகவல் தொழில்நுட்ப கட்டடங்களை கட்டவும் எல்காட் நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.