தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிதிச் சிக்கல் - சேவையை நிறுத்தும் சூழலில் வோடஃபோன்- ஐடியா நிறுவனம்?

வோடஃபோன் - ஐடியா நிறுவன செல்போன் சேவை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2020-02-21 10:36 GMT
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிலுவை வைத்துள்ள ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் கட்டணத்தை உடனடியாக செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஏர்டெல் 10 ஆயிரம் கோடி ரூபாயையும், வோடஃபோன்- ஐடியா நிறுவனம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயையும் முதற்கட்டமாக செலுத்தி உள்ளன. கடும் நஷ்டத்தில் உள்ள இந்த நிறுவனங்கள் நிலுவை தொகையை செலுத்த நிதி திரட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், நிதி நெருக்கடியை சமாளிக்க சேவை கட்டணங்களை, செல்போன் நிறுவனங்கள் உயர்த்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. வோடஃபோன்- ஐடியா  நிறுவனத்தின் நிலுவை 57 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் சேவை நிறுத்தப்படலாம் என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாத  வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்