சிறார் ஆபாச வீடியோ பதிவேற்றம் : ஹோட்டல் தொழிலாளி கைது

நாமக்கல் அருகே சிறார் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த ஓட்டல் கடை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-12 02:53 GMT
சிறார்  ஆபாச வீடியோக்களை இணையதளத்தல் பதிவேற்றம் செய்பவர்கள் மீது சைபர் க்ரைம் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்,  
பரமத்திவேலூரை அடுத்த  சோழசிராமணி, மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த குருசாமி, சிறார் ஆபாச படங்களை சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமூக ஊடகப் பிரிவில் இருந்து புகார் அளிக்கப்பட்டது. இதனைடுத்து  சென்னை உணவகத்தில் பணியாற்றும் அவரை நாமக்கல் சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.  அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார்,  இணையதள கணக்கையும் முடக்கியுள்ளனர்.  ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்