என்எல்சி முன்பு திரண்ட விஜய் ரசிகர்கள் : படப்பிடிப்புக்கு பாஜக எதிர்ப்பு - விசிக ஆதரவு

நெய்வேலி என்எல்சி முன்பு திரண்ட விஜய் ரசிகர்களை, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-02-07 19:59 GMT
என்.எல்.சி. 2ஆவது சுரங்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் "மாஸ்டர்" திரைப்படத்தின் படப்பிடிப்பு  நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு திரண்ட பாஜகவினர், சினிமா படப்பிடிப்பிற்கு எப்படி அனுமதிக்கலாம், என கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, தகவலறிந்த விஜய் ரசிகர்கள், அங்கு திரண்டனர். இதையடுத்து, அப்பகுதிக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாஜகவை கண்டித்தும், விஜய்க்கு ஆதரவாகவும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், படப்பிடிப்பு முடிந்து, நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் வெளியே வர, திரண்டிருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன், நுழைவு வாயிலை நோக்கி வந்ததால், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
Tags:    

மேலும் செய்திகள்