அரசு பேருந்து ஓட்டுனர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் : நடவடிக்கை எடுக்க கோரி ஓட்டுனர்கள், நடத்துனர்கள் போராட்டம்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஊட்டியில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வழிமறித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியை சேர்ந்த சிலர், தங்கள் தலைவர் வரும்போது வழிவிடவில்லை என கூறி பேருந்தின் ஓட்டுனர் பாபுவை தாக்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஊட்டியில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வழிமறித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியை சேர்ந்த சிலர், தங்கள் தலைவர் வரும்போது வழிவிடவில்லை என கூறி பேருந்தின் ஓட்டுனர் பாபுவை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, மற்ற அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்தை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார்
மூன்று மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து, போராட்டமானது கைவிடப்பட்டது.