எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கு - பிரதான விசாரணை பட்டியலில் இருந்து வழக்கு நீக்கம்
சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேலாளர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இந்த திட்டத்தின் மேலாளர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று பிரதான பட்டியலில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலை திட்ட மேலாளர் சார்பில் வழக்கை நாளை விசாரிக்க பட்டியலிட வேண்டும் என நீதிபதி ரமணா அமர்வில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கு பட்டியலில் வரும்போது விசாரிக்கப்படும் என தெரிவித்தார்...