தந்தை, மகன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் - ஜாமீனில் வெளியே வந்த நபர் வெட்டிக் கொலை

புதுக்கோட்டை அருகே ஜாமீனில் வெளியே வந்த நபர் பழிக்குப் பழியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-01-22 09:34 GMT
புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் பகுதியை சேர்ந்த வீராச்சாமி என்பவரின் மகன் முத்து. ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்த இவர்களுக்கு முன்விரோதம் இருந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான மூர்த்தி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் களமாவூர் பகுதியில் உள்ள வயல்வெளிக்கு இன்று காலை அவர் சென்ற போது கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.  பழிக்குப்பழி வாங்க மூர்த்தி படுகொலை செய்யப்பட்டுள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிமுக நிர்வாகியாக உள்ள மூர்த்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்