கல்லணையில் பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு

தஞ்சை மாவட்டம் கல்லணையில், காவிரி உரிமை மீட்புக் குழு விவசாயிகள், பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

Update: 2020-01-16 13:37 GMT
தஞ்சை மாவட்டம் கல்லணையில், காவிரி உரிமை மீட்புக் குழு விவசாயிகள், பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லணையில் அணையை கட்டிய கரிகால் சோழனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரிகால் சோழனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விவசாயிகள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கல்லணையை புதுப்பித்த சர் ஆர்தர் காட்டனுக்கும் மரியாதை செய்தனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக்குக்கு, இந்த ஆண்டு முதல் தமிழக அரசு விழா எடுப்பது போல், ஆண்டுதோறும் கரிகால் சோழனுக்கும் விழா எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்