ஊரக உள்ளாட்சி தேர்தல் போட்டி எதிரொலி - ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்

சுயேட்சையாக போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்றவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-01-07 02:56 GMT
சுயேட்சையாக போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்றவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், கருக்கல்வாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பாமக வைசேர்த்த கணேசன் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற நிலையில், மர்ம நபர்கள் சிலர் அவர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்