கடலூர் : ஊராட்சி தேர்தல் முடிவுக்கு பின்னர் பயங்கர மோதல்
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இரு தரப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் குறித்த வீடியோகாட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம் வெள்ளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுசிகலா தேவநாதன் மற்றும் அம்சலைகா தர்மராஜ் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில், சுசிலா தேவநாதன் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார். இந்நிலையில், இரண்டாம் தேதி மாலை வெள்ளப்பாக்கம் பள்ளத்தெரு, மேட்டுத்தெரு பகுதியில் மர்ம நபர்கள் சிலர் வீடுகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் சுசிலா தேவநாதன் தரப்பு ஆதரவாளர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த தர்மராஜ் ஆதரவாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சாலை ஓரத்தில் இருந்த கட்டைகளை எடுத்து கொண்டு காவல் நிலையம் முன்பே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.