"ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமை" : விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - கவிஞர் காசி ஆனந்தன் வலியுறுத்தல்
ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் இந்தியாவில் வசித்து வரும் ஈழத்தமிழர்களை, இலங்கைக்கு செல்லுங்கள் என கூறுவதை தவிர்க்க வேண்டும் என கவிஞர் காசி ஆனந்தன் வலியுறுத்தி உள்ளார்.
ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் இந்தியாவில் வசித்து வரும் ஈழத்தமிழர்களை, இலங்கைக்கு செல்லுங்கள் என கூறுவதை தவிர்க்க வேண்டும் என கவிஞர் காசி ஆனந்தன் வலியுறுத்தி உள்ளார். இலங்கை அகதிகள் பிரச்சனை மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு, பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய, காசி ஆனந்தன், ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்குவது என்பது தேவையற்றது என கூறினார். இலங்கை திரும்பிச்செல்லும் தமிழர்களுக்கு அந்நாடு உரிய மரியாதை அளிக்காது என்ற அவர், இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்கு குறைந்தபட்சம் ஒரிரு மாதத்திலேயே நிரந்தர வசிப்பிட உரிமை கொடுக்க வேண்டும் என்று,வலியுறுத்தினார்.