உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தமிழகத்தின் இளம் வேட்பாளர் வாக்களித்தார்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் இளம் ஆண் வேட்பாளர் தனது வாக்கினை செலுத்தினார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் இளம் ஆண் வேட்பாளர் தனது வாக்கினை செலுத்தினார். கோவை அடுத்த நீலாம்பூர் ஊராட்சி 3-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு, 21 வயது நிரம்பிய நாகார்ஜூன் என்பவர் போட்டியிடுகிறார். இன்று 2ஆம் கட்ட தேர்தலில், அவர் தனது வாக்கை பதிவு செய்தார். இவரே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடிய இளம் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.