பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டமான அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அடல் பூஜல் யோஜனா திட்டத்தை துவக்கியுள்ளதற்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். நீர் ஆதாரங்களை மேம்படுத்த தமிழகத்தில் குடிமராமத்து உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் மேலும் நீர் வளத்தை மேம்படுத்திட, நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டமான அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.