ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் இன்றுமுதல் படகு சவாரி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் இன்றுமுதல் படகு சவாரி தொடங்கியது.

Update: 2019-12-25 21:42 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் இன்றுமுதல் படகு சவாரி தொடங்கியது. பருத்திப்பட்டு ஏரியில், 28 புள்ளி 15 கோடி ரூபாய் மதிப்பில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து 46 புள்ளி 45 லட்சம் ரூபாய் செலவில் 10 படகுகளுடன் படகு சவாரியும் தொடங்கியுள்ளது. தொடக்க சலுகையாக 2 நாட்களுக்கு இலவச சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இதனை தொடங்கி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்