குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் கோவையில் ஊர்வலமாக வந்து கண்டன முழக்கம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம் போடி, பெரியகுளம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.