"தேர்தல் நடக்கும் மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசு இல்லை" : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தேர்தல் நடக்க கூடிய 27 மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசு வழங்க மாட்டோம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2019-12-19 10:10 GMT
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்கக்கோரி,வேடசந்தூரைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர்  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு,  நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, தேர்தல் நடக்க கூடிய ஊராட்சி பகுதிகளுக்கு, பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வில்லை என,  அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார். அதன்படி, 27 மாவட்டங்களுக்கு  பொங்கல் பரிசு வழங்க மாட்டோம் என அவர் உறுதியளித்துள்ளார்.  தேர்தல் நடக்காத 9 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்