போலி சிபிஐ அதிகாரிகள் போல நடித்து கொள்ளை - கொள்ளை கும்பல் தலைவன் காட்பாடியில் கைது

சினிமா பாணியில் போலி சிபிஐ அதிகாரிகள் போல நடித்து தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் தலைவனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-12-17 09:44 GMT
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் காமெடி.. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான இந்த படத்தின் காட்சிகளை போலவே நிஜத்திலும் நடந்திருக்கிறது. 

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் சிபிஐ அதிகாரிகள் என கூறி போலியாக ஒரு கும்பல் முகாமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இததையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் ஹரி என்ற நபர் பிடிபட்டார். 

மேலும் அவர் வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களும், 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு தங்கியிருந்த மற்றவர்கள் தப்பி ஓடிய நிலையில் அவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

ஹரி தலைமையிலான இந்த கும்பல், சிபிஐ அதிகாரிகள் என கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை பிடித்து விசாரித்தால் தான் முழுமையான தகவல்கள் தெரியவரும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்