அரியலூர்: ஏரிக்கரையில் சாய்ந்த பழமையான ஆலமரம் - ஆட்சியரின் உத்தரவால் மீண்டும் நடப்பட்டது

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் ஏரிக்கரையில் சாய்ந்த ஐம்பது ஆண்டுகள் பழமையான ஆலமரம் மீண்டும் நடப்பட்டுள்ளது.

Update: 2019-12-14 03:43 GMT
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் ஏரிக்கரையில் சாய்ந்த ஐம்பது ஆண்டுகள் பழமையான ஆலமரம் மீண்டும் நடப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழையால் ஆலமரம் ஏரியின் உட்பகுதியில் சாய்ந்தது. பின்னர்  மரத்தை பார்வையிட்ட ஆட்சியர் மீண்டும் அதே இடத்தில் நட உத்தரவிட்டார். இந்நிலையில் நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு மரத்தினை அதே இடத்தில் நட்டு வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்