"மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வித்தியாசமான வழக்கு

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வழக்கு தொடர்ந்து வரும் வேளையில் மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க கோரி வித்தியாசமான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்டுள்ளது.

Update: 2019-12-09 13:31 GMT
தேனியை சேர்ந்த உதயகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் டாஸ்மாக் கடையில் உள்ள மதுபான பாட்டில்களை மனமகிழ் மன்றங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்வதோடு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். தேனி மாவட்டத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் அதிகம் நடப்பதாகவும், இவற்றை தடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, கிருஷ்ணவள்ளி  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்..

Tags:    

மேலும் செய்திகள்