அஞ்சல் துறை சார்பில் டேபிள் டென்னிஸ் போட்டி : நிகழ்ச்சியில் காவல் ஆணையர் விஸ்வநாதன் பங்கேற்பு
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், அஞ்சல் துறை சார்பில் 35-வது தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், அஞ்சல் துறை சார்பில் 35-வது தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் தொடங்கி நடைபெற்றன. இதில், தமிழகம், கர்நாடகா உள்பட 18 அஞ்சல் வட்டங்களை சேர்ந்த 144 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், இந்திய அஞ்சல் துறை, நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு, மலிவான விலையில் தகவல்தொடர்பு சேவையை வழங்கி வருவதாக தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பேசிய அர்ஜூனா விருதுபெற்ற வீரர் அந்தோணி அமல்ராஜ், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியா, உலகளவில் 8-வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார்.