ஜவுளி வியாபாரி வீட்டில் 110 சவரன் நகைகள் கொள்ளை போன விவகாரம் - மாமனார், மருமகள் அரங்கேற்றிய நாடகம்

கன்னியாகுமரி அருகே ஜவுளி வியாபாரி வீட்டில் 110 சவரன் நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் மாமனார் மருமகள் அரங்கேற்றிய நாடகம் என்பது தெரியவந்துள்ளது.

Update: 2019-12-08 10:12 GMT
பள்ளியாடி அருகே உள்ள செக்குவிளையை சேர்ந்த  துணி வியாபாரியான ராஜையனுக்கு மனைவி மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் ஒரே இடத்தில் உள்ள இரண்டு வீடுகளில் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமையன்று, வீட்டில் புதைத்து வைத்திருந்த 110 சவரன் நகை கொள்ளைபோனதாக, ராஜையனும் அவரது மூத்த மருமகள் பிரீதாவும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து, சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை குறித்த தடங்கள் சிக்காத நிலையில் ராஜையன் மற்றும் பிரீதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது குடும்பத்தாருக்கு சொந்தமான நகைகளை எடுத்து விற்று விட்டதால் அந்த நகைகள் கொள்ளைபோய்விட்டதாக நாடகமாடியதாக, பிரீதா கூறியுள்ளார். பிரீதாவின் நாடாகத்திற்கு மாமானார் ராஜையன் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் அம்பலமானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்