உள்ளாட்சி தேர்தல் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தமிழக உள்ளாட்சி தேர்தலை 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வார்டுகள் மறுவரையறை செய்யப்படாததால், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என தீர்ப்பு அளித்துள்ளது. தேர்தல் நடத்தாத 9 மாவட்டங்களில் அடுத்த 4 மாதங்களுக்குள் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது.