கும்பகோணம் கோயிலுக்குள் தேங்கி நிற்கும் மழைநீர் : பக்தர்கள் ஏமாற்றம்
கும்பகோணம் அடுத்துள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
கும்பகோணம் அடுத்துள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் கோயிலுக்குள் செல்ல முடியாமல் வருகை தந்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மலேசியா சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு பக்தர்கள், கோயில் வாசலிலேயே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பினர். தேங்கி நிற்கும் மழை நீரை முற்றிலுமாக அகற்ற கோயில் நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.