உள்ளாட்சி தேர்தல்...நிலுவை வழக்குகள்
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள்
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது, எதிர்க்கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.உயர்நீதிமன்றத்தில், தி.மு.க தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, 4மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் துணை மேயர், துணைத்தலைவர் பதவியிடங்களில், பழங்குடி மற்றும் பட்டியல் இன பெண்களுக்கு இடஒதுக்கீடு செ.கு.தமிழரசன் தொடர்ந்த வழக்கு, குன்றத்தூர் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரிய வழக்கு என மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதேபோல் உச்சநீதிமன்றத்தில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் வார்டு மறுசீரமைப்பு பணிகளை முடித்துவிட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி திமுக மனு,வார்டு வரையறை செய்த பின் தேர்தல் நடத்தக் கோரி, எட்டு வாக்காளர்கள் தொடர்ந்த 6 பொதுநல மனு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி கடந்தாண்டு வழக்கறிஞர் ஜெய்சுதீன் தொடர்ந்த மனு என மொத்தம் எட்டு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.