பாக்யராஜ் கருத்துக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு - நடவடிக்கை எடுக்க புகார் மனு
இசை வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குனர் பாக்யராஜ் கூறியிருந்த கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.
இசை வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குனர் பாக்யராஜ் கூறியிருந்த கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பாக்யராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் எனும் அமைப்பினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் பாக்கியராஜின் பேச்சு பெண்கள் மத்தியில் மன வேதனையையும் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.